Skip to main content
Header Line
Header Line

மதம் மற்றும் கடவுள் குறித்து மகாத்மா காந்தி கூறிய தத்துவங்கள்! Happy Gandhi Jayanti 2020

 விடுதலை இந்தியாவுக்காக போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவரான மகாத்மா காந்தியின் 151 ஆவது பிறந்தநாளை கொண்டாட தேசமே தயாராகி வருகிறது. காந்தியின் மதம் மற்றும் கடவுள் குறித்த கருத்துக்களை இப்போது பார்ப்போம்.


மதம் மற்றும் கடவுள் குறித்து மகாத்மா காந்தி கூறிய தத்துவங்கள்!

உலகெங்கிலும் உள்ள காந்தியை பின்பற்றுபவர்கள் காந்தி ஜெயந்தியை சர்வதேச அகிம்சை தினமாக அனுசரிக்கின்றனர். 02 அக்டோபர் 1869 ஆம் ஆண்டு பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறகு தேசத்தின் தந்தை ஆனார். காந்தி அதிகமான கடவுள் நம்பிக்கை கொண்டவர். அவர் தன்னை ஒரு சனாதன இந்து என அழைத்துக்கொண்டார்.

இந்து புனித நூல்களான வேதங்கள், புராணங்கள் போன்றவற்றில் இடம் பெறும் போதனைகளை அவர் வெகுவாக நம்பினார்.பாரதன் குமாரப்பாவால் தொகுக்கப்பட்டு திருத்தப்பட்ட என் மதம் என்கிற புத்தகத்தில் காந்தி மதம் குறித்து விவரிக்கும்போது “மதம் என்பது மனித உடலில் உள்ள நிரந்தரமான உறுப்பு போன்றது. நமது ஆத்மாவிற்குள் நம்மை நாமே கண்டுப்பிடிப்பதற்கு ஆத்மா நமக்கு உதவி புரிகிறது.

அக்டோபர் 2 ஆம் தேதி அவரது 151 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தேசமே தயாராகி வரும் நிலையில் கடவுள், ஆன்மீகம் குறித்து காந்தி கூறிய சில மேற்கோள்களை இப்போது பார்ப்போம்.


மதம் மற்றும் கடவுள் குறித்து மகாத்மா காந்தி கூறிய தத்துவங்கள்!எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாக கொண்டது. உண்மை என் கடவுள். அகிம்சை என்பது கடவுளை உணர்ந்து கொள்வதற்கான ஒரு வழிமுறையாகும்.
மனித குலத்திற்கு செய்யும் சேவையின் வழி நான் கடவுளை காண முயற்சி செய்கிறேன். ஏனெனில் கடவுள் பரலோகத்திலோ அல்லது கீழயோ இல்லை. மாறாக அவர் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கிறார்.
ஒரு வரையுறுக்க முடியாத சக்தி எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளது. நான் அதை பார்க்கவில்லை என்றாலும் அதை உணர்கிறேன். என் புலங்களின் மூலம் நான் உணரும் மற்றவற்றை விட அது மாறுப்பட்டதாக உள்ளது.
என்னை பொறுத்தவரை கடவுள் சத்தியமும் அன்பும் கொண்டவர், கடவுள் அறநெறி கொண்டவர், அச்சமற்றவர். அவரே ஒளியாகவும் வாழ்வின் ஆதாரமாகவும் இருக்கிறார். கடவுள் எல்லாவற்றையும் தாண்டி நமது மன்சாட்சியாக இருக்கிறார்.
கடவுளுக்கு மதம் என்பதே கிடையாது.
ஒரு மனிதன் தனது சொந்த மதத்தை முழுமையாக பின்பற்றினால் அதன் மூலம் மற்ற கடவுள்களையும் அவன் பின்பற்றுபவனாகிறான். கடவுள் என்பவர் ஒரே ஒருவர் மட்டுமே. அவருக்கான பாதைகள் வெவ்வேறானதாக இருக்கின்றன.
கடவுளின் முன்பு மனிதன் நிற்கும்போது அவனுடைய செயல்களை தாண்டி அவனது நோக்கங்கள் காரணமாக அவன் அறியப்படுவான். கடவுள் அவனது மனதை வாசிப்பார்.
ஒவ்வொரு நாள் காலையிலும் நாம் இந்த தீர்மானத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். பூமியில் உள்ள எவர் ஒருவருக்கும் நான் பயப்படமாட்டேன். நான் கடவுளுக்கு மட்டுமே பயப்படுவேன். நான் யாருடைய தவறான விருப்பத்தையும் நிறைவேற்ற மாட்டேன். யாருடைய அநீதிக்கு கீழும் அடிப்பணிய மாட்டேன். நான் உண்மையை ஆயுதமாக கொண்டு பொய்யை வெல்வேன். உண்மையை பேசுவதற்காக வரும் எந்த துன்பத்தையும் தாங்கி கொள்வேன்.
அன்பு இருக்கும் இடத்தில்தான் கடவுளும் இருக்கிறார்.
எனது குறைப்பாடுகள், தோல்விகள் மற்றும் வெற்றிகள் அனைத்தும் கடவுளிடமிருந்து எனக்கு கிடைத்த ஆசீர்வாதங்கள் ஆகும். மேலும் அவற்றை நான் அவரது காலடியில் வைக்கிறேன்.
கடவுள் மீது நம்பிக்கை கொள்வதன் மூலம் மனிதக்குலத்தின் சகோதரத்துவம் அதிகமாகிறது.
ஒரு மனிதரின் மனதில் இருந்து கோபத்தை முற்றிலுமாக நீக்குவது கடினமான செயல் என எனக்கு தெரியும். தனிப்பட்ட முயற்சியின் மூலம் அதை செய்ய முடியாது. கடவுளின் ஆசி இருந்தால் மட்டுமே அதை செய்ய முடியும்.
ஒரு மனிதன் தன்னை அறிந்துக்கொள்வதே அவனது வாழ்வின் முக்கிய நோக்கமாகும். எல்லா உயிரினங்களில் இருந்து நம்மை அடையாளம் காண நாம் கற்றுக்கொண்டு விட்டால் நாம் அவைகளுக்கு தீங்கு செய்ய மாட்டோம்.
முழுமையாக கடவுளிடம் சுய சரணடைதல் வேண்டும்.
கவலையை போல உடலை வீணாக்க கூடிய விஷயம் வேறு எதுவும் இல்லை. கடவுள் மீது நம்பிக்கை கொண்ட ஒருவர் எதை குறித்தும் கவலைப்படவோ வெட்கப்படவோ தேவையில்லை.Category : Meniya

Post a comment

0 Comments

KShare - Shayari Quotes Wishes SMS KShare™ - Shayari Quote Wishes SMS
Team of KJMENIYA
x